தூத்துக்குடி தொகுதி திமுக, பாஜக  வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, பாஜக வேட்பாளர்கள் திங்கள்கிழமை (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, பாஜக வேட்பாளர்கள் திங்கள்கிழமை (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விடுமுறை நாள்கள் என்பதால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு பெறவில்லை. செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இதுவரை சுயேச்சையாக இருவர் மனு தாக்கல் செய்துள்ளனர். இத்தொகுதியில் திமுக-பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், பிரதான கட்சி வேட்பாளர்கள் இன்னும் மனு தாக்கல் செய்யவில்லை. திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்கின்றனர்.
கனிமொழி:  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, திங்கள்கிழமை முற்பகல் 11 மணியளவில் தனது வேட்புமனுவை அளிக்கிறார். முன்னதாக, திமுக கூட்டணி கட்சியினர் தூத்துக்குடி- பாளையங்கோட்டை பிரதானச் சாலையில் உள்ள ராஜாஜி பூங்கா அருகில் இருந்து ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில்
திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழிசை செளந்தரராஜன்: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், திங்கள்கிழமை மதியம் 12 மணியளவில் தனது வேட்பு மனுவை அளிக்கிறார். இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி பானுபிருந்தாவன் ஹோட்டலில் நடைபெறும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். பின்னர், தூத்துக்குடி தேவர்புரம் சாலையில் அமைந்துள்ள தலைமை தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். இதில், பாஜக, அதிமுக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com