நலவாரியக் கலைஞர்கள் இசைக்கருவி பெறலாம்

நாட்டுப்புற கலைஞர்கள் சமூக மேம்பாட்டுக்காக தமிழக அரசால் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் செயல்படுகிறது.

நாட்டுப்புற கலைஞர்கள் சமூக மேம்பாட்டுக்காக தமிழக அரசால் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் செயல்படுகிறது. இந்த வாரியத்தில் அரியலூர் மாவட்டத்தில் 318 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இக் கலைஞர்களுக்கு சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் படி ஒரு மாவட்டத்துக்கு 10 கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இலவச இசைக்கருவிகள், ஆடை, ஆபரணங்கள் வழங்கப்படுகின்றன.
இவற்றைப் பெறநலவாரியத்தில் பதிந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.10 கட்டணம் செலுத்தி புதுப்பித்திருக்க வேண்டும்.  
ஏற்கெனவே இசைக்கருவி பெற்றிருத்தல் கூடாது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தோர் தங்களுக்கு தேவையான இசைக்கருவிகள் ஆடை, ஆபரணங்கள் குறித்து விண்ணப்பத்தை நலவாரிய புத்தக நகலுடன் நகலுடன் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, 12 ஆவது வார்டு, கதவு எண் 5, ராதாகிருஷ்ணன் தெரு, கே.சி.காம்ப்ளக்ஸ், விளாமுத்தூர் ரோடு, பெரம்பலூர் என்ற முகவரிக்கு 30 ஆம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்க வேண்டும். 
30 ஆம் தேதிக்கு பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. மாவட்ட ஆட்சியர்  மு.விஜயலட்சுமி இதை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com