வேகக் கட்டுப்பாடு கருவிகளைப் பொருத்தி  லாரிகளை இயக்க வேண்டும்: மாவட்ட எஸ்.பி

அரியலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அனைத்து லாரிகளுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவிகளைப் பொருத்த நடவடிக்கை

அரியலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அனைத்து லாரிகளுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவிகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் மற்றும் சிமென்ட் ஆலை நிர்வாகத்தினருக்கு எஸ்.பி. வீ.ரா. ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். 
          அரியலூர் மாவட்டத்தில் லாரிகளால் அதிக விபத்துகள் ஏற்பட்டு வருகின்றனர். இதைக் குறைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி வீ.ரா. ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிமென்ட் ஆலை அலுவலர்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
       கூட்டத்தில் எஸ்.பி ஸ்ரீனிவாசன் பேசியது:  வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தி லாரிகளை இயக்க வேண்டும். சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் இருந்து இயக்கப்படும் லாரிகள் ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே இயக்க வேண்டும் என நிர்ணயம் செய்ய வேண்டும். லாரி ஓட்டுநர்களுக்கு போதுமான ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் வாகனத்தை இயக்கும் முன் வாகன ஒட்டுநர்களுக்கு சாலை விபத்து நடைபெறாவண்ணம் இயக்கிடுமாறு அறிவுரை வழங்கப்பட வேண்டும். ஓட்டுநர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வண்ணம்  தேநீர் மற்றும் பழச்சாறு வழங்க வேண்டும். சிமென்ட் ஆலை வளாகத்தில் அனைத்து ஓட்டுநர்களுக்கும் போக்குவரத்து தொடர்பான கல்வி அளிக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி உத்தரவிட்டார். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
      கூட்டத்தில், அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com