கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் ஆய்வு

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகளை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.


அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகளை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்ட தட்சிணாமூர்த்தி மற்றும் அம்மன் கற்சிலைகள் திருமானூரில் உள்ள காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளை ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கோயிலில் உள்ள அனைத்து சிலைகளையும், பார்வையிட்டு கோயில் நிர்வாகிகளிடம் அவர் கூறுகையில், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் விரைவில் ஆற்றைத் தோண்டி கள ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
ஆய்வின்போது கோயில் செயல் அலுவலர் அருண் பிரகாஷ், திருமானூர் காவல் நிலைய ஆய்வாளர் அன்புசெல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com