விவசாயிகளுக்கு அங்கக பண்ணைய பயிற்சி

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் வட்டார வேளாண்மை துறையின் சார்பில் அங்ககப்  பண்ணை குறித்த

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் வட்டார வேளாண்மை துறையின் சார்பில் அங்ககப்  பண்ணை குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி இடையார் கிராமத்தின் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
 பயிற்சிக்கு ஜயங்கொண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்து ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை பாதிக்கப்படுவதோடு பூச்சி நோய்த் தாக்குதலும் அதிகரித்து சுற்றுப்புறச்சூழலும் பாதிக்கப்படும். எனவே விவசாயிகள் மண் ஆய்வு முடிவுகளின்படி தேவையான அளவு ரசாயன உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், தொழு உரம், மண்புழு உரம், ஊட்டமேற்றிய தொழு உரம், தென்னை நார் கழிவு உரம், கரும்பு தோகையை மக்க வைத்து உரம் தயாரித்தல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.  உயிர் உரங்கள் பயன்படுத்துதல் மற்றும் பசுந்தாள் உரமிடுதல் குறித்தும் கூறினார். இதில், எடையார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பண்ணை மகளிர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com