276 ஹெக்டேரில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க இலக்கு

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டாரத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் 276 ஹெக்டேரில் ரூ.1.68 கோடி மதிப்பில்

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டாரத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் 276 ஹெக்டேரில் ரூ.1.68 கோடி மதிப்பில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் ஆட்சியர் த. அன்பழகன். 
குளித்தலை வட்டம் சத்தியமங்கலம் மற்றும் வலையபட்டி பகுதியில் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவர் மேலும் கூறியது: 
குளித்தலை வட்டாரத்தில் காய், கனி, பழப் பயிர்கள், நெல்லி, கொய்யா, மரவள்ளி, மிளகாய், கத்தரி, தக்காளி உள்ளிட்ட பயிர்களும், பந்தல் பயிர்களான பாகல், புடல் ஆகிய பயிர்களை விவசாயிகள் சொட்டுநீர் பாசனத் திட்டத்தின் கீழ் மகசூல் செய்யும் வகையில் 276 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்திற்கு, அரசு  ரூ.1.68 கோடி மானியம் வழங்கியுள்ளது.  இதுவரையில் 99 விவசாயிகளுக்கு 80 ஹெக்டேர் நிலத்தில் ரூ.40 லட்சம் மானியத்தில் சொட்டுநீர்ப் பாசன அமைப்பு  அமைத்துத் தரப்பட்டுள்ளது. 
மீதமுள்ள பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 40 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 43 விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படவுள்ளது என்றார். ஆய்வின்போது வேளாண் இணை இயக்குநர் ஜெயந்தி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் கலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com