மத்திய அரசின் திட்டங்கள் அந்தந்த மாநில மொழிகளில் தான் இருக்க வேண்டும்

மாநிலங்களில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளில்தான் இருக்க வேண்டும் என்றார்


மாநிலங்களில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளில்தான் இருக்க வேண்டும் என்றார் மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை.
கரூர் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜையை திங்கள்கிழமை தொடக்கி வைத்த அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை தருவதுதான் ஜனநாயகம்.
மத்தியில் ஆளும் பாஜகவோ, முந்தைய காங்கிரúஸா இந்தி மொழியில் மாநிலங்களில் திட்டங்களைக் கொண்டு வந்தால் இங்கு யாருக்குப் புரியும். மாநிலங்களில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளில்தான் வைக்க வேண்டும். இதுதொடர்பாக மக்களவையில் கூட கேள்வி எழுப்பினேன். சர்வ சிக்ச அபியான் என்பதை அனைவருக்கும் கல்வி இயக்கம் எனக்கூறினால் கெட்டுவிடுமா?. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களுக்குப் புரியும் வகையில் இருக்க வேண்டும். திட்டங்களின் பெயர் மூலம் இந்தி மொழியை புகுத்த நினைக்கும் அவர்களது எண்ணம் எடுபடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com