சாலை மறியல்: மின் ஊழியர்கள் 22 பேர் கைது

ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி கரூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில்

ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி கரூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மின்ஊழியர்கள் 22 பேரைப் போலீஸார் கைது செய்தனர். 
மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் அடையாளம் கண்டு, ரூ.380 கூலி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் கரூர் கிளை செயலாளர் தனபால் தலைமையில் அந்த அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் கரூரில் கோவைச் சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, கிளை பொருளாளர் செல்வம் முன்னிலை வகித்தார். 
சிஐடியு மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். பின்னர் ஊழியர்கள் அனைவரும் கோவைச்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நகர காவல் நிலையத்தினர் போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாக மின் ஊழியர்கள் 22 பேரைக் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கரூரில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com