அரசுப் பேருந்தில் சேவைக் குறைபாடு: கிளை மேலாளர் உள்பட மூவருக்கு அபராதம்

அரசுப் பேருந்தில் பயணிகளுக்கு சேவை குறைபாடு காரணமாக, மதுரை சிட் காட் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை

அரசுப் பேருந்தில் பயணிகளுக்கு சேவை குறைபாடு காரணமாக, மதுரை சிட் காட் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் உள்பட 3 பேருக்கு அபராதம் விதித்து பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையப் பகுதியைச் சேர்ந்தவர் செ. கணேசன் (48). இவர், தனது குடும்பத்தினருடன் கடந்த 25.10.2016- இல் பெரம்பலூரிலிருந்து திருச்சிக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். 
அப்போது, கணேசனிடமிருந்து ரூ. 500 பெற்றுக்கொண்ட பேருந்து நடத்துநர் 4 பேருக்கும் கட்டணமாக ரூ. 108 எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகையை திருச்சி பேருந்து நிலையத்தில் தருவதாகக் கூறினாராம். திருச்சி நீதிமன்றம் அருகே பேருந்து சென்றபோது, கணேசனின் மாற்றுத்திறனாளி மகன் உடல் உபாதைக்காக அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்குவற்கு அனுமதி கேட்டதற்கு பேருந்தை நிறுத்த மறுத்து மத்திய பேருந்து நிலையத்துக்கு சென்றுவிட்டனராம். 
இதனால் கணேசனுக்கும், நடத்துநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மீதமுள்ள தொகையை தர மறுத்தத்தோடு, மதுரையில் உள்ள கிளை அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்தாராம். 
இதுகுறித்து கடந்த 1.11.2016 -இல் மதுரை சிட்காட் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர், ஓட்டுநர், நடத்துநருக்கு வழக்குரைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.  இதனால் மன உளைச்சலுக்குள்ளான கணேசன், இழப்பீடாக ரூ. 90 ஆயிரம், வழக்கு செலவுக்காக ரூ. 10 ஆயிரம், வழங்க வேண்டிய சில்லரை தொகையை பெற்றுத் தரக்கோரி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
வழக்கை விசாரித்த நுகர்வேர் நீதிமன்ற நீதிபதி தர்மன், உறுப்பினர் ஜெயலட்சுமி ஆகியோர், மதுரை சிட்காட் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர், ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர், மனுதாரருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் 15 ஆயிரம் இழப்பீட்டு தொகையாகவும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 20 ஆயிரம். 
சில்லரை தொகை ரூ. 392 வழங்கவும், இத் தொகையை 2 மாத காலத்துக்குள் வழங்கவும், தவறும்பட்சத்தில் 3 பேர் மீதும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com