டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபான விற்பனைத் தொகையை சென்னையில் உள்ளது போன்று, மாநிலம் முழுவதும் அந்தந்த கடைகளில் அன்றாடம் பெற்றுச் செல்லும் வகையிலான ஏற்பாட்டை செய்துத் தர வேண்டும், பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும், போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர்  பி.வி.ராமலிங்கம் தலைமை வகித்தார். 
 மாவட்டத்தலைவர்கள் ஆர்.இளங்கோவன்(கரூர்), செந்தில் (ஈரோடு), மாவட்டச்செயலாளர்கள் கே.ராஜதுரை(கரூர்), முருகேசன்(ஈரோடு) உள்ளிட்டோர் 
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். துணைத் தலைவர் மா.உதயகுமார் வரவேற்றார்.  ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com