பாதித்த பகுதியில் உள்ள மக்களை போராடத் தூண்டும் ஸ்டாலின்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் அரசுக்கு எதிராக மக்களைப் போராடத் தூண்டுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் அரசுக்கு எதிராக மக்களைப் போராடத் தூண்டுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை.
கரூர் மாவட்டம், புலியூரில் பொதுமக்களிடம் புதன்கிழமை கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைத்து,  பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.  இப்பணிகளைத் தடுக்கும் நோக்கில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பணிகள் மேற்கொள்ளாத வகையில்,  பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசுக்கு எதிராக தனது கட்சிக்காரர்களைப் போராட திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தூண்டி விடுகிறார்.இதனால்தான் நிவாரணப்பணிகள் மேற்கொள்வதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஜி.எஸ். டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து தமிழக அரசின் வருவாய் வெகுவாக குறைந்து, வருவாய்அனைத்தும் மத்திய அரசின் கைக்குச் சென்றுவிட்டது. கஜானாவின் சாவி மத்திய அரசிடம்தான் உள்ளது. இந்த கஜானாவின் சாவி திறந்தால்தான் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி ஆதாரங்கள் வந்துசேரும்.
 கேரளத்தில்  மழை, புயல் பாதிப்பு ஏற்பட்டபோது அங்கு எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் நிவாரணப்பணிகளில் தன்னையும் இணைத்துக்கொண்டு பணியாற்றியது. ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற சூழல் இல்லை என்பதை ஸ்டாலின் உணர வேண்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com