வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் செயல்விளக்கம்

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது போல் ஒத்திகை நிகழ்ச்சியை வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தினர்

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது போல் ஒத்திகை நிகழ்ச்சியை வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தினர் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இறங்கி வியாழக்கிழமை செய்து காண்பித்தனர்.  
வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டால் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டால் வீட்டில் இருப்பவர்களை மீட்பது குறித்து கரூர் அடுத்த வேலாயுதம்பாளையம் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் வியாழக்கிழமை  செயல் விளக்கம் அளித்து செய்து காண்பித்தனர். 
தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் வீரர்கள் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கனரக வாகன டியூப்பில் காற்றடித்தும்,  காலி டிரம்களில் வாழைமரங்களைக் கட்டியும், ரப்பர் படகு , கயிறு,  உயிர்காக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை உருவாக்கி வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியைப் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com