ஆரியூர் செல்லாண்டியம்மன் கோயில் குடமுழுக்கு

ஆரியூர் ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் போக்குவரத்துத் துறை

ஆரியூர் ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த ஆரியூரில் வெண்டுவன் குலத்தின் குலதேவதை ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோயில் திருப்பணிகள் நிறைவுற்று இந்த குடமுழுக்கு நடைபெற்றது. 
விழாவை முன்னிட்டு கடந்த 11-ம் தேதி கிராமசாந்தி பூஜை, 13-ம் தேதி கொடுமுடி காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீர் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம், 14-ம் தேதி அதிகாலை  மஹாகணபதி ஹோமம், சுதர்ஸனஹோமம், குபேர லஷ்சுமி ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து 14-ம் தேதி மாலை முதற்கால யாக பூஜை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் ஆறாம் காலயாக பூஜையும், மூலமந்திர ஹோமங்களும், 8.15-க்கு கடம்புறப்பாடு, விமானம் மற்றும் மூலஸ்தான மஹா குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கை மயிலாடுதுறை சிவபுரம் சிவவேத ஆகம பாடசாலை ஸ்பாதபகர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் எம். முரளி சிவாசாரியார் உள்ளிட்டோர் நடத்தினர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் திருப்பணிக் குழுத் தலைவரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன், ஆண்டாங்கோவில் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஆர். சேகர், வி. அக்ஷயநிவேதா, வி. அஸ்வதவர்ணிகா, ஏ.எஸ். ராகுல்ராஜ், ஆர்எஎஸ். தரணி, எஸ். சிவா மற்றும் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஆசி எஸ். முத்துசாமி, அறங்காவலர்கள் கே.ஆர். தங்கவேல், எஸ். தங்கவேல், நடந்தை கே. சதாசிவம், இ.பி. சுப்ரமணியன், கோயில் அறக்கட்டளை துணைத் தலைவர் போதூர் பி. முத்துசாமி, செயலர் டி.வி. ரவிக்குமார், துணைச் செயலர் பி. பழனிசாமி, பொருளாளர் சி. ஜெகதீசன், பக்தர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com