செல்வமகள் திட்டத்தில்  இதுவரை ரூ.66.33 கோடி சேமிப்பு

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கரூர் அஞ்சலக கோட்டத்தில் இதுவரை ரூ.66.33 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக அஞ்சலகக்

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கரூர் அஞ்சலக கோட்டத்தில் இதுவரை ரூ.66.33 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக அஞ்சலகக் கண்காணிப்பாளர் எம். கலைக்குமார் தெரிவித்தார்.
மத்திய அரசு பெண் குழந்தைகளின் கல்விச் செலவு, திருமண வயது எட்டும்போது தேவைப்படும் செலவுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா எனும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை அஞ்சலகங்களில் கடந்த 22.1.2015-இல் அறிமுகப்படுத்தியது. கரூர் அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட அஞ்சலகங்களில் இதுநாள் வரை 28,610 கணக்குகள் துவங்கப்பட்டு, அதில்  கடந்த 12 ஆம் தேதி வரை ரூ.66 கோடியே 33 லட்சத்து 83 ஆயிரத்து 403 சேமிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில், அதாவது கடந்த 1.4.2018 முதல் கடந்த 12 ஆம் தேதி வரை 3916 கணக்குகள் துவங்கப்பட்டு, 14.18 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com