குறைதீர் கூட்டத்தில் 332 மனுக்கள் அளிப்பு

பெரம்பலூர் மாவட்டஆட்சியர்அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூர் மாவட்டஆட்சியர்அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 332 மனுக்கள் பெறப்பட்டன.
உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளிடையே சிக்கனம் மற்றும் சேமிக்கும் பண்பை வளர்த்திடும் வகையில் நடத்தப்பட்ட கட்டுரை, நாடகம், நடனம் மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 28 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வீதம் மொத்தம் ரூ. 6,96,000 நிதி ஆதரவு உதவித்தொகையும் மாவட்ட வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com