செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர பூஜை

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில், ஞாயிற்றுக்கிழமை குபேர யாக


பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில், ஞாயிற்றுக்கிழமை குபேர யாக வேள்வி நடந்தது.
இக்கோயிலில் பிரசித்தி பெற்ற சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு தனி சந்நிதி உள்ளது. மேலும், 12 ராசிகளுக்கும் 12 தூண்களில், 12 குபேர பெருமான் இருப்பது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பாகும்.
இங்கு ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரத்தில் குபேர யாக வேள்வி நடைபெறும். அதன்படி, கார்த்திகை மாத குபேர பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கணபதி ஹோமம், புன்யா வாஹனம், லஷ்மி ஹோமம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டு, 96 வகை மூலிகைப் பொருள்கள் யாக வேள்வியில் செலுத்தப்பட்டு மஹா பூர்னா ஹூதி, தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து, சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு அரிசி மாவு, பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப் பொடி, சொர்ணாபிஷேகம் நடத்தப்பட்டு, ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட கலசத் தீர்த்தங்களால் குபேர பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும், பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைக்கு பிறகு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இந்த வேள்வியில் பங்கேற்பதன் மூலம் கடன் பிரச்னை தீரும், செல்வ வளம் பெருகும் என்பதால் திருச்சி, சேலம், பெரம்பலூர் உள்பட சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குபேர பெருமானை தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com