இருதய நோய்: குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சையின்றி  நுண்வலைசாதனம் மூலம் சிகிச்சை

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறந்த குழந்தைகளுக்கு இருதய நோய்

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறந்த குழந்தைகளுக்கு இருதய நோய் அறுவை சிகிச்சையின்றி நுண்வலை சாதனம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார் அதன் தலைவர் அ. சீனிவாசன். 
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய நோய் பிரிவு மூலம் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இத்துறையின் மூலம் சமார் 32 ஆயிரம் நோயாளிகள் பல்வேறு வகையான சிகிச்சை முறைகள் மூலம் பயனடைந்துள்ளனர். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் மற்றும் பல்வேறு காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   அதன்படி, இதுவரை 2,200 பேருக்கு ஆன்ஜியோகிராம் அறுவை சிகிச்சையும், 750 பேருக்கு ஆன்ஜியோ பிளாஸ்டிக் அறுவை சிசிச்சையும், டிவைஸ் குலோசர் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதய துடிப்பு குறைதல் குறைபாடு காரணமாக 20 பேருக்கு பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. வால்வுஅடைப்பு ஏற்பட்ட 30 நோயாளிகளுக்கு பலூன் சிகிச்சை, இருதய நோய் ஏற்பட்ட 225 பேருக்கு திறந்த வெளி அறுவை சிசிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை, 2,975 அறுவை சிகிச்சை இலவமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
பிறவியிலேயே இதயத்தில் ஏற்படும் இதய பிரிசுவர் துளை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது நவீன சிகிச்சை மூலம் அறுவை சிகிச்சையின்றி இதய பிரிசுவர்  துளையை நுண்வலை சாதனம் கொண்டு மிகவும் துல்லிய முறையில் புறநோயாளி சிகிச்சை முறையிலேயே பல்வேறு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.   ஒரு வயதுக்கும் குறைந்த குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையை மருத்துவர்கள் கோபிநாத், ஆஷிக் ஆகியோர் அளித்துள்ளனர்.
 இந்த சிகிச்சைக்கு பொதுவாக மயக்கம் மற்றும் செயற்கை சுவாசம் தேவை. அனால், அதன் உதவியில்லாமல் மிதமான மயக்க மருந்தின் உதவியோடு, இச்சிகிச்சையை செய்து சாதனை புரிந்துள்ளனர். இந்த கடினமான, நுணுக்கமான சிகிச்சை முறை சென்னை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனையிலும் மேற்கொள்ளப்படுகிறது என்றார் சீனிவாசன். 
பேட்டியின்போது, செயலர் பி. நீலராஜ்,  முதன்மையர் ரெங்கநாதன், கண்காணிப்பாளர் நீலகண்டன், இருக்கை மருத்துவ அலுவலர் பானுமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com