ஜவுளிப் பூங்கா பணிகளை தொடங்கக் கோரிக்கை

பாடாலூரில் அமையவுள்ள ஜவுளிப் பூங்கா பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

பாடாலூரில் அமையவுள்ள ஜவுளிப் பூங்கா பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
பாடாலூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் அ. வேல்முருகன் தலைமையில்  இதுகுறித்து, ஆட்சியரிடம் அளித்த மனு: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் மற்றும் இரூர் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் இத்திட்டத்தை துரித நடவடிக்கை எடுத்து செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
காவிரிநீர் வழங்க வலியுறுத்தல்: புதிதாக மோகனூர் அல்லது ஈரோட்டில் இருந்து நாமக்கல், தா.பேட்டை, துறையூர் வழியாக லாடபுரம் ஏரிக்கு புதிதாக கால்வாய் அமைத்து, பெரம்பலூர் மாவட்டத்துக்கு காவிரி நீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ராணி மங்கம்மாள் அறக்கட்டளைத் தலைவர் வி. புவனேந்திரன் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.  
பாலத்தை சீரமைக்கக்கோரி மனு: குரும்பலூர் பேரூராட்சிக்குள்பட்ட பாளையம் கிராமத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டுமானப் பணியின்போது 3 பாலங்கள் இடிக்கப்பட்டு 3 மாதங்களாகியும், சீரமைக்க படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com