குற்றம் பொறுத்த ஈசுவரர் கோயிலில் தேரோட்டம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு.ஆடுதுறை கிராமத்தில் உள்ள குற்றம் பொறுத்த ஈசுவரர் திருக்கோயில் மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு.ஆடுதுறை கிராமத்தில் உள்ள குற்றம் பொறுத்த ஈசுவரர் திருக்கோயில் மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
அபராதரட்சகர் கோயில் என்றழைக்கப்படும் இக்கோயில்  மாசித் திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் விநாயகர், பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, பிரவேச பலி, சந்திரசேகர்- அம்மன் புறப்பாடும் நடைபெற்றது. தொடர்ந்து பிப்.16 ஆம் தேதி திருக்கல்யாண  உற்ஸவம் நடைபெற்றது. 
இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி, திங்கள்கிழமை காலை 9 மணிக்கு பஞ்ச மூர்த்தி அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு மேல் சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். மாலையில் தேர் வடம்பிடிக்கப்பட்டு, நான்கு ரத வீதிகளின் வழியாகச் சென்றது.
தேரோட்டத்தில்  பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 
செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மாசி மகத் திருவிழாவும், பிற்பகல் 3 மணிக்கு நீவா நதியில் தீர்த்த வாரியும், இரவு 8 மணிக்கு அம்பாள் புறப்பாடும் நடைபெறுகிறது. 20 ஆம் தேதி ஊஞ்சல் விடையாற்றுடன் திருவிழா நிறைவடைகிறது. 
விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் பி. சன்னாசி, செயல் அலுவலர் நா. ரமேஷ் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com