"பதாகைகள், கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி தேவை'

பெரம்பலூர் மாவட்டத்தில் விளம்பர பதாகைகள் மற்றும் கொடி கம்பங்கள் அமைக்க உரிய அனுமதி பெற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 

பெரம்பலூர் மாவட்டத்தில் விளம்பர பதாகைகள் மற்றும் கொடி கம்பங்கள் அமைக்க உரிய அனுமதி பெற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
சென்னை உயர்நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையில் பொது இடங்களில் பேனர், கொடி கம்பங்கள் மற்றும் விளம்பர பதாகைகள் அமைப்பது தொடர்பாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது: 
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறையினரிடம் முன் அனுமதி பெறாமல் பேனர்கள், விளம்பர பதாகைகளை சாலை ஓரங்களில், தனியார் இடத்தில் வைக்கக்கூடாது. இவற்றை வைப்பதற்கு 2 நாள்களுக்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரியத் தொகை செலுத்தப்பட்ட சலானுடன் சமர்ப்பிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும். 
கல்வி நிறுவனம், வழிப்பாட்டு தலம், சாலை ஓரம், சந்திப்பு, சிலைகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் அருகே 100 மீட்டருக்கு அப்பாற்பட்டு தான் பேனர்கள் வைக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள், மாவட்ட ஆட்சியரின் அனுமதி எண், நாள், எத்தனை நாள்களுக்கு செல்லத்தக்கது எனும் விவரத்தை விளம்பர பதாகையில் அச்சிடப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்தவுடன் விண்ணப்பதாரரே, அச்சுறுத்தல் விபத்து ஏற்படாத வகையில் அப்புறப்படுத்த வேண்டும். 
மேலும், அச்சக உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரின் அனுமதி கடிதம் இல்லாமல் பேனர் அச்சடித்து கொடுக்க கூடாது. மேற்கண்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்த, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும், அச்சக உரிமையாளர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சாந்தா. 
கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, வருவாய்க் கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் மற்றும் அனைத்து கட்சிப் பிரமுகர்கள், அச்சக உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com