"விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்'

விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித்

விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கலைப் பண்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏ. லட்சுமிபிரபா.
பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலை மற்றும் கல்லூரியில் வியாழக்கிழமை நடந்த விளையாட்டுப் போட்டிகளை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர் எம். சிவசுப்பிரமணியம் தொடக்கி வைத்தார். செயலர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.  
தொடர்ந்து, மாணவிகளுக்கான 100 மீ, 200, 500 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு ஏறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.    
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கலைப் பண்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. லட்சுமிபிரபா பேசியது: 
விளையாட்டில் ஒவ்வொரு நிமிடத்தையும் மிகச் சரியாக பயன்படுத்த வேண்டும். விளையாட்டு என்பது அமைதி, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத் தன்மை போன்றவற்றைக் கொடுக்கிறது. உள்ளம் உயர்வானால் வாழ்க்கை உயரும். ஒவ்வொருவரின் எண்ணங்களும் தூய்மையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு விளையாட்டும் வாழ்வின் உண்மைகளை வெளிப்படுத்துகிறது. மாணவிகள் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றார் அவர். 
ஏற்பாடுகளை, ஆங்கிலத் துறை தலைவர் எம். ராமேஸ்வரி தலைமையில் அனைத்துத் துறை பேராசிரியர்களும் செய்தனர். கல்லூரி முதல்வர் எம். சுபலட்சுமி வரவேற்றார். இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் வி. கற்பகம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com