புயல் பாதிப்பு இழப்பீட்டுத் தொகைகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் மீட்பு நடவடிக்கைகளில் சேதமடைந்த வீடுகளுக்காக ரூ. 56 கோடியும், 27 வகையான

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் மீட்பு நடவடிக்கைகளில் சேதமடைந்த வீடுகளுக்காக ரூ. 56 கோடியும், 27 வகையான உதவிப் பொருள்கள் ரூ. 69 கோடி மதிப்பிலும், கால்நடை இழப்பீட்டுக்காக ரூ. 57 லட்சமும் வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு கஜா புயல் மீட்புப் பணிகள் முன்னேற்றம் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமை வகித்துப் பேசியது:
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி வேகமாகத் தொடங்கியுள்ளது. குறிப்பாக குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளுக்கு உண்டான நிவாரண நிதி ரூ.56 கோடி மாவட்ட கருவூலத்துக்கு வரப்பெற்று, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுமட்டுமல்லாமல் ரூ.69 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் முதற்கட்டமாக வரப்பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கும் இழப்பீட்டுத் தொகை முதற்கட்டமாக ரூ.57 லட்சம் வரப்பெற்றதுடன், மேலும் ரூ.2 கோடி வர உள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சார இணைப்பு முழுவதுமாக இன்னும் ஓரிரு நாளில் வழங்கப்பட்டு விடும். இதைத் தொடர்ந்து விவசாயத்திற்கான மின் இணைப்புகளும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. 
வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்தில் இருந்து தற்போது 1,500 பணியாளர்கள் மின் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பகல் நேரத்தில் பணி நடைபெறும் இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. குறிப்பாக அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை எக்காரணத்தை முன்னிட்டும் பொதுமக்கள் தொட வேண்டாம். மேலும், அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு ஆசிரியர்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர மகளிர் சுய உதவிக்குழுக்கள், 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் மின்சாரப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர். 
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் உள்ளிட்ட முதல்நிலை அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com