பள்ளி மேற்கூரை சீரமைப்புப் பணி: வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு

அறந்தாங்கி அருகே தரமற்ற முறையில் அரசுப் பள்ளியின் மேற்கூரை சீரமைக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, அறந்தாங்கி வட்டார வளர்ச்சி


அறந்தாங்கி அருகே தரமற்ற முறையில் அரசுப் பள்ளியின் மேற்கூரை சீரமைக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சீரமைப்பு பணிகளைப் பார்வையிட்டார். மேலும், தரமான வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர் அறிவுறுத்தப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சிலட்டூர் ஊராட்சிக்குட்பட்ட குன்னக்குரும்பி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட மேற்கூரை சீரமைப்பு பணிகள் தரமற்ற முறையில் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு குன்னக்குரும்பி ஸ்ரீ கோகுலம் நற்பணி மன்றத் தலைவர் கிட்டு கருணாகரன் மற்றும் கிராம மக்கள் சார்பில் கடந்த சனிக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், இப்பள்ளியில் 2015-16 கல்வியாண்டில் நடைபெற்ற தரமற்ற பராமரிப்புப் பணிகள் காரணமாக பள்ளியின் கான்கிரீட் மேற்கூரையில் நீர்க் கசிவு ஏற்பட்டு வகுப்பறையில் மழைநீர் கசியத் தொடங்கியது. அண்மையில் கஜா புயலால் கசிவு அதிகமாகி மழைநீர் பெருமளவில் கசிந்து வந்தது. இதைத்தொடர்ந்து பள்ளி மேற்கூரை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. சீரமைப்பு பணிகள் தரமற்ற வகையிலும், பெயரளவுக்கு மட்டுமே நடைபெறுவதாக தலைமை ஆசிரியர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
புகாரின்பேரில், அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதி மற்றும் மதியழகன் உள்ளிட்ட ஒன்றிய அலுவலர்கள் பள்ளி மேற்கூரையை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். இதில், தரமற்ற முறையில் செய்யப்பட்ட பதிக்கப்பட்ட கற்கள் அகற்றப்பட்டன. மேலும், தரமாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com