மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரக்குழு உறுப்பினர் ஏ.முத்தையா தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், நகரச் செயலர் சி.அடைக்கலசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஜியாவுதீன், க.முகமதலி ஜின்னா, எஸ்.பாலசுப்பிரமணியன், டி.சலோமி, துரை.நாராயணன் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் குடும்ப அட்டை அடிப்படையில் குடும்பத்திற்கு ரூ. 25 ஆயிரமும், உடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வழங்க வேண்டும். நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணி நாள்களை 150 நாள்களாக வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், 2017-18 ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை 100 சதவீத இழப்பாகக் கருதி இழப்பீடு வழங்க வேண்டும், புயலால் சேதமடைந்த மா, பலா, தேக்கு, வேம்பு உள்ளிட்ட மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வீடுகளை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் போதிய நிவாரணம் வழங்கி அவர்களுக்கு அரசு வீடு கட்டித்தர வேண்டும், தென்னை மரம் ஒன்றிற்கு இழப்பீடாக ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயக் கடன்கள், சுய உதவிக்குழு வங்கி கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும், வாழை ஏக்கருக்கு 50-ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் 6-மாத காலத்திற்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பொன்னமராவதியில்....: பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலர் என். பக்ரூதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சங்கர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.ராமசாமி, விஆர்எம். சாத்தையா, அ.சௌந்திரராஜன், என். பிச்சையம்மாள், எம். மாயழகு, எம். நாவலர், எஸ்.நல்லதம்பி, நாகராஜ், அ.தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அறந்தாங்கியில்...: நிவாரணப் பொருள்கள் வழங்கக்கோரி அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரத்தில் வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
அறந்தாங்கி நகரச் செயலாளர் க. தங்கராசு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வி. லெட்சமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விராலிமலையில்...: அன்னவாசல் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளர் சுப்பையா தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினர் ரங்கசாமி மற்றும் ஜோஷி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், ரகுபதி, தேவராஜன், சோலையான், சோமையா, பாலாமணி கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டையில்: கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் வி.ரெத்தினவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், எ.ராமையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com