சூரிய சக்தியின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

அன்னவாசல் வட்டாரத்தில் 40 விவசாயிகளுக்கு தொடையூர் வருவாய் கிராமம் பனிகொண்டான்பட்டியில்

அன்னவாசல் வட்டாரத்தில் 40 விவசாயிகளுக்கு தொடையூர் வருவாய் கிராமம் பனிகொண்டான்பட்டியில் வேளாண் மற்றும் சகோதர துறைகளில் சூரிய சக்தியின் பயன்பாடு குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
அன்னவாசல் வட்டார  வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) 2018-19 ம் ஆண்டு மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணைச் சீரமைப்புத் திட்டத்தின் வேளாண் அலுவலர் பழனியப்பா வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகள், திருந்திய நெல் சாகுபடி, உழவன் செயலி மற்றும் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து விளக்கினார். 
வேளாண் பொறியியல் துறை இளநிலை பொறியாளர் முத்துக்குமார் சூரிய சக்தியின் பயன்பாடு மற்றும் வேளாண் மற்றும் இதர துறைகளில் சூரிய ஆற்றலின் பயன்படுத்தும் சகோதரத் துறைகள் பற்றியும்  விளக்கினார்.
மேலும் வேளாண் பொறியியல் துறையின் மானிய திட்டங்கள், விவசாயிகள் பதிவு செய்யும் முறை, சூரிய சக்தி விளக்கு பொறி, சூரியசக்தி மின்மோட்டார் பராமரிப்பு முறை பற்றி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 
ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ரா. ராஜூ, உதவி வேளாண் அலுவலர் பாஸ்கர் ஆகியோர் செய்தனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் ந. உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com