தோட்டக்கலைப் பண்ணையில் பாரம்பரிய மர சாகுபடி பயிற்சி முகாம்

குடுமியான்மலை தோட்டக்கலைப் பண்ணையில் பாரம்பரிய மர சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

குடுமியான்மலை தோட்டக்கலைப் பண்ணையில் பாரம்பரிய மர சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சிக்கு அன்னவாசல் வட்டார தொழில்நுட்பக் குழு அமைப்பாளரும், வேளாண் உதவி இயக்குநருமான க.வெற்றிவேல் தலைமை வகித்து தரமான மர சாகுபடியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வேளாண் அலுவலர் பழனியப்பா வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகள், திருந்திய நெல் சாகுபடி, உழவன் செயலி மற்றும் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து விளக்கிக் கூறினார். குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வனவியல் துறை இணை பேராசிரியர் ராஜேந்திரன், மர சாகுபடி செய்வதன் முக்கியத்துவம், நாற்றாங்கால் பராமரிப்பு, பாரம்பரிய முறையில் மரங்கள் நடவு செய்யும் முறைகள், மண் அரிப்பு தடுத்தலின் முக்கியத்துவம், இயற்கை வளம் பேணுதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். தோட்டக்கலை அலுவலர் குமார் பண்ணையின் செயல்பாடுகள், நாற்றங்கால் உற்பத்தி முறைகளை விளக்கினார். பயிற்சியில் அன்னவாசல் வட்டாரத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் பங்கேற்றனர். 
ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆர்.ராஜூ, உதவி வேளாண்மை அலுவலர் அருள்மொழி, உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில், வட்டார  தொழில்நுட்ப மேலாளர் த.லட்சுமி பிரபா நன்றி கூறினார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com