நம் காலத்துக்கேற்ப பொருள்களை தந்து கொண்டிருக்கிறது திருக்குறள்

இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட நம் காலத்துக்கேற்ப திருக்குறள் பொருள்களைத் தந்து கொண்டிருக்கிறது என்றார் எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா.

இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட நம் காலத்துக்கேற்ப திருக்குறள் பொருள்களைத் தந்து கொண்டிருக்கிறது என்றார் எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இலக்கியச் சொற்பொழிவில், கடக்க இயலாக் கவிதைகள் என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
மனிதன் இயற்கையை விட்டு விலகிக் கொண்டிருக்கும் நிலையில், கவிதைகளை எழுதும்போதும், படிக்கும்போதும் மீண்டும் இயற்கையோடு  மீண்டும் இணைக்கப்படுகிறான். கவிதை கம்பீரமானது. ஏனென்றால், அதன் வடிவ நேர்த்தி காரணமாக கம்பீரமாக எழுதப்படுவதால் படிப்போருக்கு அந்தக் கம்பீரத்தைக் கொடுக்கிறது. தொடர்ந்து சிங்கம்போல் நடக்க வைக்கிறது.
நல்ல நூலுக்கு இயல்பு, அது ஒரு முறை படிக்கப்படும்போது தரும் பொருளை அடுத்த முறை படிக்கும்போது வேறொரு பொருளைத் தர வேண்டும். மீண்டும் மீண்டும் படிக்கப்படும் போது, அந்தந்தக் காலத்துக்குரிய பொருளைத் தருவதுதான் நல்ல நூல், நல்ல படைப்பாகும். 
அந்த வகையில் திருக்குறள் இந்த 21ஆம் நூற்றாண்டிலும்கூட நம் காலத்துக்கேற்ப பொருள்களைத் தந்து கொண்டிருக்கிறது. அதேபோல, கம்பனின் வரிகளும், திருநாவுக்கரசரின் வரிகளும் கடக்க இயலாக் கவிதைகளாக மிளிருகின்றன என்றார் முத்தையா.
நிகழ்வுக்கு காமராஜ் கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர்
இ.ஏ.ரத்தினசபாபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பன்னாட்டு அரிமா இயக்கங்களின் மாவட் ட ஆளுநர் எச். ஷேக்தாவூத் சிறப்புரை நிகழ்த்தினார். முன்னதாக கே. ஜெயராம் வரவேற்றார். முடிவில் கு. வடிவேல் நன்றி கூறினார். வரவேற்புக் குழுவின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி தொகுத்தளித்தார். எழுத்தாளர் நா. முத்துநிலவன் பரிசுகளை அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com