பட்டியலின பிரிவினரை தேவேந்திர குல வேளாளராக அறிவிக்க வேண்டும்: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

பட்டியலின பிரிவினரை தேவேந்திர குல வேளாளராக அறிவிக்க வேண்டும் என்றார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் க. கிருஷ்ணசாமி.

பட்டியலின பிரிவினரை தேவேந்திர குல வேளாளராக அறிவிக்க வேண்டும் என்றார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் க. கிருஷ்ணசாமி.
இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
பட்டியலின பிரிவினரை தேவேந்திர குல வேளாளராக அறிவிக்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் 4 மாநில மாநாடுகள்,  2 பேரணிகள் நடத்தப்பட்டன. மேலும், பட்டியலின பிரிவினரை தேவேந்திர குல வேளாளராக அறிவித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும். இதை வலியுறுத்தி முதல் கட்டமாக 200 கிராமங்களைச் சேர்ந்த ஊர் நாட்டாண்மைகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இக்கோரிக்கையை அரசின் கவனத்துக்கு ஆட்சியர் கொண்டு செல்ல வேண்டும். 
காவிரி ஆணையத்துக்கும், ஒழுங்காற்றுக் குழுவுக்கும் நிரந்தர தலைவரை மத்திய அரசு நியமிக்க வேண்டும். தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என்றார் அவர்.
மேலும், ஆட்சியரகத்தில் அவர் அளித்த மனு: பட்டியலின பிரிவில் உள்ள பள்ளர், குடும்பர், தேவேந்திர குலத்தார், பண்ணாடி, கடையர், காலாடி, வாதிரியார் உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்படும் 7 சாதிகளும் பட்டியல் பிரிவில் உண்மையில் வெவ்வேறானவை அல்ல. அனைத்தும் தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பிரிவினர்தான். எனவே, தேவேந்திர குல வேளாளராக அறிவித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு அல்லது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்தால், சாதி ரீதியான பிரச்னைகள் வர வாய்ப்பில்லை. எனவே, தேவேந்திர குல வேளாளர் என அறிவித்து பட்டியலின பிரிவினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com