அதிராம்பட்டினத்துக்கு வராத காவிரி: விவசாயிகள், பொதுமக்கள் கடும் அதிருப்தி

டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூலை 19-ம் தேதி மேட்டூர் அணையும், ஜூலை 22-ம் தேதி கல்லணையும் திறக்கப்பட்டது. இந்த இரு அணைகளும் திறக்கப்பட்டு


டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூலை 19-ம் தேதி மேட்டூர் அணையும், ஜூலை 22-ம் தேதி கல்லணையும் திறக்கப்பட்டது. இந்த இரு அணைகளும் திறக்கப்பட்டு சுமார் 4 மாதங்களாகியுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைமடைப் பகுதியான அதிராம்பட்டினம் பகுதிக்கு இதுவரை காவிரி நீர் வரவில்லை.
இதனால் தங்கள் ஊரை தொடர்ந்து புறக்கணிக்கணிக்கும் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிராம்பட்டினம் பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.எச். அஸ்லம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
குடிநீர் தேவைக்காக அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதியின் ஏரி, குளங்களுக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி, ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கடந்த ஜூலை 23, ஆக. 13 ஆகிய தேதிகளில் மனுக்கள் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஆக. 21-ம் தேதி பட்டுக்கோட்டையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பொதுப்பணித்துறை, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், முதல்கட்டமாக அதிராம்பட்டினத்திலுள்ள 5 குளங்களை 20 நாள்களுக்குள் நிரப்பித் தருவதாக அதிகாரிகள் கையொப்பமிட்டு எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். எனினும் அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. இதைத் தொடர்ந்து, கடந்த செப். 17 -ம் தேதி, அதிராம்பட்டினத்தை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூரில் ஆட்சியரை நேரில் சந்தித்து தண்ணீர் விட வலியுறுத்தி மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com