ஐப்பசி மாத கடைமுழுக்கு:காவிரியில் நீராடிய பக்தர்கள்

ஐப்பசி மாத கடை முழுக்கையொட்டி, திருவையாறு, கும்பகோணத்தில் உள்ள காவிரியில் ஏராளமான பக்தர்கள் வெள்ளிக்கிழமை புனித நீராடினர்.

ஐப்பசி மாத கடை முழுக்கையொட்டி, திருவையாறு, கும்பகோணத்தில் உள்ள காவிரியில் ஏராளமான பக்தர்கள் வெள்ளிக்கிழமை புனித நீராடினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் புயல் வீசினாலும், திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் வெள்ளிக்கிழமை புனித நீராடினர். 
இதேபோல, கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. 
இதையொட்டி, நாகேஸ்வரன் கோயிலிலிருந்து விநாயகர், சுப்பிரமணியர், பெரியநாயகி அம்பாள், நாகேஸ்வர சுவாமி, சண்டிகேஸ்வரர் சுவாமி ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வீதியுலா சென்றனர்.
மங்கள வாத்தியமான நாகசுரம், செண்டைமேளம், சிவபூத கன இசைவாத்தியங்கள் ஆகியவற்றுடன் கோயிலிலிருந்து பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காவிரி ஆற்றின் பகவத் படித்துறைக்கு  சென்று நண்பகல் 12 மணியளவில் சுவாமிகள் வந்தனர். அங்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளினர்.
தொடர்ந்து அஸ்திர தேவருக்கு  பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர்  காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றபோது, ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
பின்னர் பஞ்சமூர்த்தி சுவாமி தீர்த்தவாரி மண்டபத்திலேயே தங்க வைக்கப்பட்டு இரவு மின்னொளி அலங்காரத்தில் வீதியுலாவாக கோயிலை சென்றடைந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com