எல்.ஐ.சி.-இல் "ஜீவன் சாந்தி' புதிய திட்டம் அறிமுகம்

எல்.ஐ.சி.-இல் ஜீவன் சாந்தி என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார் அந்நிறுவனத்தின் தஞ்சாவூர் கோட்ட முதுநிலைக் கோட்ட மேலாளர் ஏ.எஸ். சுந்தர் ராஜ்.

எல்.ஐ.சி.-இல் ஜீவன் சாந்தி என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார் அந்நிறுவனத்தின் தஞ்சாவூர் கோட்ட முதுநிலைக் கோட்ட மேலாளர் ஏ.எஸ். சுந்தர் ராஜ்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:
எல்.ஐ.சி. தனது புதிய பாலிசிகளின் அணிவகுப்பில் பங்குச் சந்தை சாராத ஒரே தவணைத் திட்டமாக ஜீவன் சாந்தி என்ற புதிய திட்டத்தை செப். 12-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இதில், 30 வயது முதல் 100 வயது வரை உள்ள ஆண், பெண் இரு பாலரும் தனி நபராகவோ, குடும்பத்தில் ஒருவருடன் இணைந்தோ இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
இதில், குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 1.50 லட்சம். அதிகபட்ச முதலீட்டுத் தொகைக்கு உச்ச வரம்பு இல்லை. வட்டி விகிதம் 7 சதவீதம். குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை மாதம் ரூ. 1,000. ஓய்வூதியத் தொகையை மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தவணையில் பெற்றுக் கொள்ளலாம். பிரிமிய தொகை ஒற்றைத் தவணையில் மட்டும் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பாலிசிதாரர்கள் விருப்பத் தேர்வு அடிப்படையில் உடனடி ஓய்வூதியம் அல்லது ஒத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியம் பெறலாம்.
ஓய்வூதியத் தொகை பாலிசி தொடக்க நாள் முதலே உறுதி அளிக்கப்படுகிறது. உடனடி ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பாலிசிதாரர் மறு மாதம் முதலே ஓய்வூதியத் தொகையைப் பெற முடியும். ஒத்தி வைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகையை ஓராண்டு முதல் 20 ஆண்டுகள் வரை ஒத்தி வைத்து ஓய்வூதியத் தொகையைப் பெறலாம்.
இத்திட்டத்தில் ஓராண்டுக்குப் பிறகு அவசர தேவைகளுக்கு பாலிசியில் கடன் பெறலாம். பாலிசி தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியை சரண்டர் செய்யும் வசதியும் உள்ளது என்றார் சுந்தர் ராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com