தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட வீரர்கள் பங்கேற்ற சிலம்பாட்டப் போட்டி

தஞ்சை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட வீரர்களுக்கான

தஞ்சை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட வீரர்களுக்கான சிலம்பாட்ட போட்டி கரந்தை தமிழ்ச்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
போட்டிகளை கரந்தை உமா மகேசுவரனார் கலைக் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் ஜி. சண்முகம் தொடங்கி வைத்தார். தஞ்சை மாவட்ட சிலம்பாட்டக் கழக துணைத் தலைவர் ராதிகாமைக்கேல் தலைமை வகித்தார்.
இதில் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இருந்து 150 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர்.  ஜூனியர், சப்ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது.  
இதில் 10 வயது முதல் 35 வயது வரையிலான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்றிடங்களை பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதலிடம் பெறும் போட்டியாளர் குடியாத்தத்தில் மாநில அளவில் நடைபெறும் சிலம்பப் போட்டிக்கு தகுதி பெற்றனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு தஞ்சை மாவட்ட சிலம்பாட்டக் கழகத் தலைவர் புனிதா கணேசன் தலைமை வகித்தார்.  தஞ்சை மாவட்ட தடகள சங்கத் தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார், தஞ்சை மண்டல உடற்கல்வி ஆய்வாளர் எம். தேன்மதி ஆகியோர் வெற்றி பெற்ற சிலம்ப வீரர், வீராங்கனைகள், சிலம்ப ஆசான்கள், நடுவர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினர். இந்நிகழ்வுகளில் தஞ்சை மாவட்ட சிலம்பாட்ட கழக பொதுச் செயலாளர் ஜி. ஜலேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com