பேராவூரணியில் யானை ஊர்வலத்துடன் பறவைக் காவடி எடுத்த பக்தர்: இன்று நீலகண்டப் பிள்ளையார் கோயில் தேரோட்டம்

பேராவூரணியில் நேர்த்திகடனுக்காக யானை ஊர்வலத்துடன் பறவைக் காவடி எடுத்த பக்தரை பார்த்து பொதுமக்கள் பக்தி பரவசமடைந்தனர்.

பேராவூரணியில் நேர்த்திகடனுக்காக யானை ஊர்வலத்துடன் பறவைக் காவடி எடுத்த பக்தரை பார்த்து பொதுமக்கள் பக்தி பரவசமடைந்தனர்.
பேராவூரணியில்  பிரசித்தி பெற்ற ஸ்ரீ நீலகண்டப் பிள்ளையார் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு சித்திரை  திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் ஏப்.9ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு,  பேராவூரணி அருகேயுள்ள ஆதனூரை சேர்ந்த செல்வம் என்ற பக்தர் தனது நேர்த்தி கடனை செலுத்த யானை ஊர்வலம்  வர அதன் பின்னே  பறவைக் காவடி எடுத்து செவ்வாய்க்கிழமை   நேர்த்திகடனை செலுத்தினார். பேராவூரணி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பறவை காவடியை பார்த்து பக்தி பரவசமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com