போலி மதுபானம் தயாரிப்பு: 4 பேர் கைது

தஞ்சாவூரில் போலி மதுபானம் தயாரித்ததாக 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.


தஞ்சாவூரில் போலி மதுபானம் தயாரித்ததாக 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள அருணா நகரில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த தனிப்படை போலீஸார் சந்தேகத்துக்குரிய வீட்டில் சோதனையிட்டனர்.
அப்போது, அங்கு போலி மதுபானம் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. மேலும், வீட்டில் இருந்த 4 பேரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.  திண்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வருவதாகக் கூறி வீட்டை வாடகைக்குப் பிடித்த இவர்கள்,  காரைக்காலில் இருந்து எரிசாராயம் வாங்கி வந்து, போலி மதுபானம் தயாரித்து, பாட்டில்களில் நிரப்பி, மதுக்கூடங்களுக்கு விநியோகம் செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து, போலி மதுபானம் நிரப்பட்ட 740 பாட்டில்களையும், 4,000 காலி பாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். 
மேலும், போலி மதுபானத்தை பாட்டிலில் நிரப்பி மூடுவதற்கான இயந்திரம், அரசு முத்திரையுடன்கூடிய லேபிள்கள், சீல் வைப்பதற்கான சாதனம் உள்ளிட்டவற்றையும் போலீஸார் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக வீட்டில் இருந்த திருச்சி சங்கிலியாண்டபுரம் எம். மகாபிரபு (24), கரூர் மாவட்டம், குளித்தலை மேல மணத்தட்டை பி. மதன்குமார் (22), தஞ்சாவூர் வடக்கு வாசல் 
முந்திரிபாளையம் விஜயதரன் (29), தெற்கு வீதி டி. விக்னேஷ் (23) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், நிகழ்விடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் பார்வையிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com