விவசாயிகள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தியாகிகள் தினத்தையொட்டி தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் விவசாயிகள், தொழிலாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தியாகிகள் தினத்தையொட்டி தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் விவசாயிகள், தொழிலாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சி.ஐ.டி.யு., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 1982 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடு தழுவிய தொழிலாளர் வர்க்கத்தின் முதல் பொது வேலைநிறுத்தத்தில் காவல் துறையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தியாகிகள் அஞ்சான், நாகூரானுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மீதான முன் பேர வர்த்தகத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 18,000 வழங்க வேண்டும். கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகரப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தி ஊதியத்தை ரூ. 400 ஆக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலர் சி. ஜெயபால், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். வாசு ஆகியோர் தலைமை வகித்தனர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலர் எஸ். ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com