பட்டுக்கோட்டை அருகே இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி

பட்டுக்கோட்டை அருகே சிவக்கொல்லையில்  தமிழியக்கம் அமைப்பின் தஞ்சை மாவட்டக் கிளை சார்பில் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

பட்டுக்கோட்டை அருகே சிவக்கொல்லையில்  தமிழியக்கம் அமைப்பின் தஞ்சை மாவட்டக் கிளை சார்பில் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு மு. இராமலிங்கம் தலைமை வகித்துப் பேசுகையில்,  தங்கள் குழந்தைகளுக்கு ஏற்கெனவே வடமொழியில் வைத்துள்ள பெயரை தற்போது தூய தமிழில் மாற்றம் செய்து, அதற்கான சான்றிதழை காண்பிக்கும் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1000 பரிசு வழங்குவதாக அறிவித்தார்.
தமிழியக்கம் அமைப்பின் மாநிலத் தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தருமான கோ.விசுவநாதன் அண்மையில் சிகாகோ நகரில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தொகுத்து வெளியிட்ட 'தூய தமிழ்ப்பெயர்கள்- 46,000' என்ற நூலை அறிமுகம் செய்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை ராஜா பேசினார்.
அண்ணாமலை பல்கலைக் கழக தமிழ்த் துறை பேராசிரியர் க.அன்பழகன் 'சங்க இலக்கியப் பொருளும் அதன் விரிவாக்கச் செயல்பாடுகளும்'  என்ற தலைப்பிலும்,  தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கண்ணதாசன் 'கல்வெட்டுகள்' என்ற தலைப்பிலும் உரையாற்றினர். அன்புச்சோலை தேன்ராசன் பட்டுக்கோட்டை ராஜாவின் சிறுகதைகள் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினார்.
நிறைவாக, 'தமிழியக்கமும் அதன் செயல்பாடுகளும்' என்ற தலைப்பில் இரா.செல்வமணி தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு 1969-ம்  ஆண்டு தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தார் வெளியிட்ட "பிழை நீக்கி எழுதுங்கள்' என்ற  நூலின் பிரதி வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com