புயல் பாதுகாப்பு முகாம்களில் ஆய்வு

கஜா புயல் காரணமாக, சிதம்பரத்தில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு முகாம்களை மாவட்டக் கல்வி அலுவலர் சுவாமிமுத்தழகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

கஜா புயல் காரணமாக, சிதம்பரத்தில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு முகாம்களை மாவட்டக் கல்வி அலுவலர் சுவாமிமுத்தழகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
 கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைப்பதற்காக சிதம்பரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் புயல் பாதுகாப்பு தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 இந்த முகாம்களை மாவட்டக் கல்வி அலுவலர் சுவாமிமுத்தழகன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 அப்போது மக்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என பார்வையிட்டார். சிதம்பரம் அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா வித்யாலயா உள்பட 5 நகராட்சி பள்ளிகளில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகளைப் பார்வையிட்டார்.
 அப்போது, மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சத்தியசீலன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் கந்தசாமி, நடராஜன், ராஜசேகர், ஜான்சன், மணிவாசகம், அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சீதா, சிவபுரி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குமரவேல், பூவாலை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com