நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரிகளை சிறை பிடித்து போராட்டம்

பழுப்பு நிலக்கரியை ஏற்றி வந்த லாரிகளை அதிகாரிகள் நிறுத்தியதால், தென்குத்து கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழுப்பு நிலக்கரியை ஏற்றி வந்த லாரிகளை அதிகாரிகள் நிறுத்தியதால், தென்குத்து கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதல் சுரங்கம் விரிவாக்கம் அருகே குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட தென்குத்து கிராமம் அமைந்துள்ளது. இங்கு, வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி, லாரிகள் மூலம் செல்லப்படும். இந்தப் பணியில் நூற்றுக்கணக்கான லாரிகள் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், தென்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர்களின் லாரிகளில் முறையாக தார்ப்பாய்கள் கட்டவில்லை எனக் கூறி அதிகாரிகள் புதன்கிழமை அவற்றை நிறுத்தி விட்டனராம். இதனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தென்குத்து கிராமத்தின் வழியாக லாரிகள் செல்லக் கூடாது எனக் கூறி, நிலக்கரியை ஏற்றி வந்த லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டு, லாரிகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com