பல்கலை.யில் ஆராய்ச்சி மையம் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. மேலாண்மைத் துறையில் தலைமைப் பண்பை மேம்படுத்துதல் - ஆராய்ச்சி மையத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. மேலாண்மைத் துறையில் தலைமைப் பண்பை மேம்படுத்துதல் - ஆராய்ச்சி மையத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
 விழாவுக்கு மேலாண்மைத் துறைத் தலைவர் சி.சமுத்திர ராஜ்குமார் தலைமை வகித்தார். அப்போது, அவர் தலைமைப் பண்பின் அவசியம், அதை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், இந்த மையத்தின் முலமாக இனி வரும் காலங்களில் பல்வேறு பயிற்சிப் பயிலரங்கங்கள் நடத்தப்படும் என்றார்.
 தொலைதூரக் கல்வி உதவி இயக்குநர் கே.விஜயராணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கான தலைமைப் பண்பு, அதை மேம்படுத்துவது குறித்து எடுத்துரைத்தார். முனைவர் ஜி.உதயசூரியன் வாழ்வின் குறிக்கோள், அதை அடைவதற்கான தலைமைப் பண்பை வளர்த்தல் குறித்து விளக்கினார். ஒருங்கிணைப்பாளர் இரா. ஆனந்த் மையத்தின் லட்சியம், முக்கியதுவம், நோக்கங்கள் குறித்து பேசினார்.
 மேலாண்மைத் துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 விழாவுக்கான ஏற்பாடுகளை முனைவர் ஏ.கார்த்திகேயன், கே.சரவணன், டி.சுனில், டி.திலீபன் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com