ரயில்வே கேட் மூடல்: மக்கள் பாதிப்பு

காராமணிக்குப்பம் கிராமத்தில் உள்ள ரயில்வே கேட் மூடப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காராமணிக்குப்பம் கிராமத்தில் உள்ள ரயில்வே கேட் மூடப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 கடலூர் - விழுப்புரம் ரயில் பாதையில் நெல்லிக்குப்பம் அருகே அமைந்துள்ளது காராமணிக்குப்பம் கிராமம். இந்தக் கிராம சாலையிலிருந்து ஊருக்குள் செல்ல வேண்டுமெனில், இந்த ரயில் பாதையை கடந்தே மக்கள் செல்ல வேண்டும். எனவே, இந்தப் பகுதியில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை ரயில்வே கேட் மூடப்பட்டதோடு, காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், அப்பகுதி வழியாகச் செல்பவர்கள் குழப்பமடைந்தனர்.
 இதற்கான காரணத்தை விளக்குவதற்காக அந்தப் பகுதியில் ஒரு அறிவிப்பு பலகையை ரயில்வே நிர்வாகம் அமைத்திருந்தது. அதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு பணியிலிருந்த அஷ்ரப்அலி என்பவரை வெளியாள்கள் தாக்கியதால் இந்தகேட்( எல்சி-151) நிரந்தரமாக மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த கா.முரளிதரன் கூறியதாவது: ரயில்வே தொழிலாளி தாக்கப்பட்டார் என்பதற்காக ரயில்வே கேட்டை மூடும் முடிவை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது ஏற்புடையதல்ல. இதுதொடர்பாக, தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் துறை மூலமாக முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, இதற்காக பொதுமக்களை தண்டிக்கக் கூடாது. ரயில்வே நிர்வாகத்தின் இந்தச் செயலால் நாங்கள் வெள்ளக்கேட் வழியாகவே ஊருக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கேட்டினை திறக்க ரயில்வே நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com