81 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் 81 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் 81 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் மூன்று ஆண்டுகள் ஒரே மாவட்டத்திலும், இதேபோல, சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அலுவலர்கள், அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், விழுப்புரம் காவல் சரகத்துக்கு உள்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர்களையும், சொந்த மாவட்டங்களைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர்களையும் பணியிட மாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் குமார் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, கடலூர் மாவட்டத்தில் 46 காவல் நிலையங்கள் 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், சிறப்புக் காவல் பிரிவுகளில் பணியாற்றி வரும் 81 காவல் உதவி ஆய்வாளர்களை விழுப்புரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்தார். 
இதேபோல, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 89 காவல் உதவி ஆய்வாளர்களை கடலூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com