நெய்வேலியில் மினி மாரத்தான் போட்டி: என்எல்சி சார்பில் நடைபெற்றது

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில், நிறுவன ஊழியர்களின் உடல் நலனை மேம்படுத்தும் நோக்கில்  மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில், நிறுவன ஊழியர்களின் உடல் நலனை மேம்படுத்தும் நோக்கில்  மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 நெய்வேலி பாரதி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு என்எல்சி நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார் தலைமை  வகித்து, மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், என்எல்சி இந்தியா நிறுவன திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் நாதெள்ள நாகமகேஷ்வர் ராவ், சுரங்கத் துறை இயக்குநர் பிரபாகர் சவுக்கி ஆகியோர் முன்னிலை வகித்தார். 
இந்த நிகழ்ச்சியில், காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், அந்த வீரர்களுக்காக மினி மாரத்தான் ஓட்டம் அர்ப்பணிக்கப்பட்டது.
ஓட்டப் போட்டியில் 
என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர், மாவட்டஆட்சியர், நிறுவனன, இயக்குநர்கள், மூத்த விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 2,500 பேர் பங்கேற்றனர். 5 கி.மீ. தொலைவு நடைபெற்ற இந்த ஓட்டப் போட்டி மீண்டும் பாரதி விளையாட்டரங்கில் நிறைவு பெற்றது.
முன்னதாக சிவகாசியைச் சேர்ந்த மூத்த தடகள வீரர் டி.டி.ராஜேந்திரன் உரையாற்றினார். ஓட்டப் போட்டியில் சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மற்றும் தமிழகம் சார்பில் பங்கேற்று வரும் என்எல்சி இந்தியா நிறுவன மூத்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் டெஸி ஜோசப், லாலி ஜோசப், ஆனந்த், தீபா, ஜெம்மா ஜோசப், முரளிதரன், முத்துக்குமார், சசிகலா, சாந்திமோல், ராஜன்பாபு உள்ளிட்டோர்  
கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com