பயங்கரவாத தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி

காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 

காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 
"கடலூர் மக்களின் மெüன அஞ்சலி' என்ற பெயரில் கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மௌன அஞ்சலி பேரணியில் பொதுமக்கள் திரளானோர் தேசியக்கொடியேந்தி கலந்துகொண்டனர்.
வடலூர்: காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, வடலூர் கருங்குழி ஏரிஸ் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எஸ்.தியாகராஜன், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஜி.கணேசன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள்  கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி மெüன அஞ்சலி செலுத்தினர்.
சிதம்பரம்: இதேபோல, சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளில் வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், அதன் தாளாளர் எஸ்.குமார் தலைமையில், முதல்வர் ரூபியாள்ராணி முன்னிலையில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். கல்வி ஒருங்கிணைப்பாளர் மகேஷ் சுந்தர் கவிதாஞ்சலி செலுத்தினார். உயிர் நீத்த வீரர்களின் தியாகம் குறித்து ஆசிரியர்கள் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடல்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
காஷ்மீரில் உயிர்நீத்த வீரர்களுக்கு சிதம்பரம் நகர பாஜக சார்பில்  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிதம்பரம் மேலரத வீதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர தலைவர்  எஸ்.கனகசபை தலைமை வகித்தார். மாவட்ட  பாஜக முன்னாள் ராணுவ பிரிவு  தலைவர் கேப்டன் ஜி.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், வீரமரணமடைந்த வீரர்களுக்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜே.பி.பாலசுப்பிரமணியன், எஸ்.சண்முகம், பாலா ரவி, எஸ்.நாகேஸ்வரன், லட்சுமணன், டி.பாண்டியன்,  ஜே.நாகராஜன், ஜி.வெற்றிவேல், டி.கே.வைத்தியலிங்கம்,  நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com