ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்: வலுவான நிலையில் புதுவை அணி

புதுச்சேரியில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேகாலயா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-ஆவது நாள் ஆட்ட முடிவில் புதுவை அணி வலுவான நிலையில் உள்ளது.  

புதுச்சேரியில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேகாலயா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-ஆவது நாள் ஆட்ட முடிவில் புதுவை அணி வலுவான நிலையில் உள்ளது.  
மேகாலயா அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்து பின்னடைவை சந்தித்தது.
 ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்  பிளைட் பிரிவில் புதுவை, சிக்கிம், மிúஸாரம், மேகாலயா உள்ளிட்ட 9 அணிகள் மோதுகின்றன. 
இதில், புதுவை சி.ஏ.பி. அணி-மேகாலயா அணி மோதும் டெஸ்ட் போட்டி புதுச்சேரி துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் திங்கள்கிழமை காலை தொடங்கியது.
 டாஸ் வென்ற புதுவை சி.ஏ.பி. அணி பேட்டிங்கை தேர்வு செய்து,  திங்கள்கிழமை மாலை 90 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. அணி வீரர் டோக்ரா 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 100-ஆவது முதல் தர டெஸ்டில் விளையாடும் அபிஷேக் நாயர் அதிரடியாக விளையாடி 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.  
 செவ்வாய்க்கிழமை தொடர்ந்த இரண்டாவது நாள் ஆட்டத்தில் புதுவை அணியின் கேப்டன் ரோகித் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். 
 அவர் 321 பந்துகளில் 138 ரன்கள் எடுத்தார்.  இதன்மூலம் புதுவை சி.ஏ.பி. அணி 389 ரன்கள் குவித்தது.  
புதுவை அணி வீரர்கள் விக்னேஷ் 27 ரன்கள்,  பங்கஜ்சிங் 10 ரன்கள், வெங்கட் 26 ரன்கள் எடுத்தனர்.  
மேகாலயா அணியில் குரிந்தர்சிங் 4 விக்கெட்களையும்,  லனான்சிங் 2 விக்கெட்டுகளையும்,  திப்பு,   சிங்ஹானியா, விஸ்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.   இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ûஸ தொடங்கிய  மேகாலயா அணி தொடக்க விக்கெட்டுகளை  பறிகொடுத்தது. 
 அந்த அணியின் வீரர் விஸ்வா 31 ரன்களிலும்,  லெமர் 16 ரன்களிலும், சில்வஸ்டார் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 
 புதுவை சி.ஏ.பி. அணி வீரர் அக்சைஜாம் 2 விக்கெட்டுகளையும்,  பேபிட் அகமத் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.   இரண்டாவது நாள் ஆட்ட நேரடி முடிவில் மேகாலயா அணி 52 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com