புதுவை பல்கலை.யில் சர்வதேச மாநாடு

புதுவை பல்கலைகழகம், பாரீஸ் 13 பல்கலைகழகம் இணைந்து உலக பொதுமையின் சர்வதேச மாநாட்டை அண்மையில் நடத்தின.

புதுவை பல்கலைகழகம், பாரீஸ் 13 பல்கலைகழகம் இணைந்து உலக பொதுமையின் சர்வதேச மாநாட்டை அண்மையில் நடத்தின.
 பல்கலை.யின் அரசியல் மற்றும் சர்வதேசவியல் துறை சார்பில் இம்மாநாடு நடத்தப்பட்டது. புதுவை பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங், பாரீஸ் 13 பல்கலைகழக பேராசிரியர் டிடியர் குவேல், அரசியல் மற்றும் சர்வதேசவியல் துறைத் தலைவர் மோகனன் பாஸ்கரன் பிள்ளை, புல முதல்வர் வெங்கட ரஹோதம், பேராசிரியர் ஜெயராம் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
 மேலும் வியத்நாம், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்களும் பிற விருந்தினர்களும் பங்கேற்றனர்.
 மாநாட்டின் சிறப்பு பற்றி பேராசிரியர் மோகனன் பாஸ்கரன் பிள்ளை பேசினார்.
 துணை வேந்தர் குர்மீத் சிங் பேசுகையில், சர்வதேச அரசியல் துறையால் சமூகத்தில் அனைத்துவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்றார்.
 புல முதல்வர் வெங்கட ரஹோதம், வருங்காலத்தில் இந்தியா சந்திக்க இருக்கும் சவால்கள் பற்றி பேசினார்.
 போர் மற்றும் பிற சவால்களான வறுமை, மனித உரிமை மீறல்கள், சர்வதேச அரங்கில் அமைதி நிலவுதல் நாடுகளுக்கிடையேயான நல்லுறவு நீடித்தல் போன்றவற்றை பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
 அதைத் தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன், சர்வதேச அரசியலும் மனிதர்களை ஒருங்கிணைப்பதையும் பற்றி பேசினார். இறுதியாக முனைவர் கீதா கணபதி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com