ஓசோன் துளைகள் குறித்த விழிப்புணர்வு நூல் வெளியீடு

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் ஓசோன் துளைகள் குறித்த விழிப்புணர்வு நூல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் ஓசோன் துளைகள் குறித்த விழிப்புணர்வு நூல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
 புதுவை பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொறியியல் மைய உதவி பேராசிரியர் தஸ்நீம் அப்பாசி மற்றும் முன்னாள் மையத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஏ. அப்பாசி எழுதிய "ஓசோன்துளை..கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம்..' என்ற ஆங்கில நுôல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
 விழாவில், பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங் கலந்து கொண்டு நுôலை வெளியிட்டார்.
 அப்போது அவர் பேசியதாவது:
 ஓசோன் துளை 1980-களில் உலகளவில் மிகப் பெரும் சுற்றுச்சூழல்அச்சுறுத்தலாக உருவானது. அது காற்றில் தொழில்துறை ரசாயனங்கள் மூலம் அடுக்கு மண்டலத்தை அடைகின்றன. அங்கு பரவிக் கிடக்கும் ஓசோன் அடுக்குகளை ஒருசேர அழித்து விடுகின்றன.
 அந்த ஓசோன் அடுக்குகள், பூமியில் பரவிக் கிடக்கும் சூரிய ஒளியில் உள்ள சில மிக அபாயகரமான புற ஊதா கதிர்கள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. ஓசோன் அடுக்கு அழிக்கப்பட்டால், பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்துவிடும். இந்த அச்சுறுத்தலின் தீவிரத்தன்மை காரணமாக 1980 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில் உலக நாடுகளின் பல நடவடிக்கைகளால் ஓசோன் அடுக்கு அழிக்கப்பட்டது. ஆனால், இந்த புத்தகத்தில் ஓசோன் படலம் மீண்டும் புவி வெப்பமடைதலின் விளைவுகளால் அழிக்கப்படுகிறது என்ற உண்மையை நுôலாசிரியர்கள் விளக்கியுள்ளனர்.
 இது குறித்து அனைவருமே யோசிக்க வேண்டும். அண்மையில், ஓசோன் துளை அண்டார்டிகா பகுதிகளில் மட்டுமே உருவாக்கப் பட்டது. ஆனால், புவி வெப்பமடைதல் காரணமாக ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக, அது இப்போது ஆர்க்டிக் பகுதிகளிலும் காணப்படுகிறது.
 இந்த நிகழ்வுகள் உலகத்தையே மிகவும் ஆபத்தான இடத்திற்கு கொண்டு செல்கின்றன.
 இந்தநுôல், ஓசோன் துளை மீது புவி வெப்பமடைதலின் விளைவைக் காட்டும் புத்தகமாகவும், சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு அறிவியல் ரீதியாக தீர்வு காணக்கூடிய முறையிலும் எழுதப்பட்டுள்ளது என்றார் குர்மீத் சிங்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com