சிங்காரவேலர் பிறந்த நாள்: முதல்வர் மரியாதை

புதுவை அரசு சார்பில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 

புதுவை அரசு சார்பில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 
இதையொட்டி, புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு முதல்வர் வே. நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
இதே போல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் நாரா. கலைநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தேவ பொழிலன், திராவிடர் கழக மாநிலத் தலைவர் சிவ. வீரமணி தலைமையிலான தொண்டர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com