பிஎஸ்என்எல் ஊழியர்கள்  வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.
பிஎஸ்என்எல் டவர்கள் பராமரிப்பை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, 4 ஜி சேவையை உடனே வழங்க வேண்டும், 10 ஆண்டு முடித்த ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யாமல் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பினர் நாடு முழுவதும் பிப். 18 முதல் 20 வரை 3 நாள்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். 
இதன்படி, திங்கள்கிழமை புதுச்சேரியில் உள்ள பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதுடன், புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி தலைமை வகித்தார். இதில் திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். 
முன்னதாக, பிஎஸ்என்எல் அலுவலகங்கள் மூடப்பட்டன. 
இதனால் பணம் செலுத்துதல், பல்வேறு புகார்களுக்காக வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். வேலைநிறுத்தம் காரணமாக வங்கிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறுப் பணிகள்
 பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com