நகைகளுக்காக இரு பெண்களைக் கொன்றவர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

நகைகளுக்காக இரு பெண்களைக் கொன்ற வரை 4 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர்.

நகைகளுக்காக இரு பெண்களைக் கொன்ற வரை 4 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர்.
 புதுச்சேரி அரும்பார்த்தபுரம் ஆனந்தம் நகர் 2-ஆவது குறுக்குத் தெரு அங்காளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ரஞ்சித் மனைவி தமிழ்ச்செல்வி (39). சித்த மருத்துவரான இவர், அரும்பார்த்தபுரம் வில்லியனூர் முதன்மைச் சாலையில், மருத்துவமனை நடத்தி வருகிறார்.
 இந்த நிலையில், சனிக்கிழமை இரவு இவரது மருத்துவமனைக்கு நோயாளி போல வந்த மர்ம நபர், தமிழ்ச்செல்வியின் கழுத்தை கேபிள் வயரால் நெரித்து, அவரிடமிருந்த 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பினார்.
 இதுகுறித்து தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து, நகையைப் பறித்துச் சென்றதாக அரும்பார்த்தபுரம் காந்தி வீதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ஆறுமுகத்தை (58) பிடித்து விசாரித்தனர்.
 விசாரணையில், சித்த மருத்துவரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டார். மேலும், கடந்த 2015 -ஆம் ஆண்டு, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த கலைவாணி, 2017- இல் அவரது தாய் கிருஷ்ணவேணி ஆகியோரை நகைகளுக்காக கொலை செய்ததும் தெரிய வந்தது.
 மேலும், இவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சதீஷ் (34) மூலம் விற்று, இருவரும் ஆடம்பரமாக இருந்ததும் தெரிய வந்தது.
 இந்த இரு வழக்குகளிலும் இதுவரை குற்றவாளிகள் பிடிபடாமல் இருந்த நிலையில், தற்போது சித்த மருத்துவரைத் தாக்கிய வழக்கில் சிக்கிய ஆறுமுகத்திடம் மேற்கொண்ட விசாரணையில், இரு பெண்களை நகைக்காக கொலை செய்தது தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
 இதையடுத்து, ஆறுமுகம், சதீஷ் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களிடமிருந்து 22 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com