கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் தலைவர்கள்!

வேட்பாளர் பெயரை அறிவிக்கும் முன்பே புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வியாழக்கிழமை ஆதரவு திரட்டினர்.

வேட்பாளர் பெயரை அறிவிக்கும் முன்பே புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வியாழக்கிழமை ஆதரவு திரட்டினர்.
 திமுக கூட்டணியில் தமிழகம், புதுவையில் காங்கிரஸýக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வியாழக்கிழமை இரவு வரை அறிவிக்கப்படவில்லை. புதுவை மக்களவைத் தொகுதியில் சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் பெயர் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே, தனது பதவியை வைத்திலிங்கம் வியாழக்கிழமை இரவு ராஜிநாமா செய்தார்.
 கடந்த 2 நாள்களாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், புதுவை பிரதேச காங்கிஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் ஆகியோர் தில்லியில் முகாமிட்டிருந்தனர்.
 இந்த நிலையில், புதுச்சேரிக்கு வியாழக்கிழமை மதியம் திரும்பிய பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், முதல்வர் நாராயணசாமியுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி, பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் புதுவை தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ., புதுவை வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன், மார்க்சிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேச செயலர் இரா.ராஜாங்கம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர்.
 பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்தை அழைத்துச் சென்று கூட்டணி கட்சித் தலைவர்களிடம் முதல்வர் நாராயணசாமி ஆதரவு திரட்டி வருவதால், வைத்திலிங்கம்தான் காங்கிரஸ் வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com